இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை இல்லை

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படாமையின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

பலவந்தமான கடத்தல்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுதல் போன்ற சம்பவங்கள் யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நீடித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பிலான அரசாங்கத்தின் தேசிய செயற்திட்டம் திருப்திகரமாக அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

உறுதி மொழிகளையும் வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்ளாது நிiயான தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென உறுப்பு நாடுகள் இலங்கையை வலிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது.

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகள் நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என சர்வதேச மன்னிப்புச்சபை அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply