தமிழகத்தில் சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் 33 பலி: 60ஆக உயரும் அபாயம்

தமிழகம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 60க்கும் மேற்‌பட்டோர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில், ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 400க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு த‌யாரிக்கும் பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வந்தன. 40க்கும் மேற்பட்ட அறைகளில், ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

அப்போது, வெடிபொருட்கள் செலுத்தும் போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்த நிலையில், ‌பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த அனைத்து அறைகளுக்கும் பரவியது. அதுமட்டுமல்லாது, வெடிபொருட்கள் இருந்த அறைக்கும் தீ பரவியது. தீ விபத்து கடுமையாக இருப்பதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு அதன் பாதிப்பு இருப்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

வெடிமருந்துகள் ‌ வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீவிபத்தைப் பார்த்த பலர் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் 33 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தின் பாதிப்பு நெடுந்தூரம் இருப்பதால், சம்பவம் நடந்த பட்டாசு ஆலை பகுதிக்கே, மீட்புக்குழுவினரால் இதுவரை செல்ல இயலவில்லை. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 60க்கும் மேற்‌பட்டோர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply