இலங்கை -இந்திய இராஜதந்திர உறவுகளில் முறுகல் ஏற்படாது என்கிறார் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் முறுகல் நிலை ஏற்படாது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக தமிழ் நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை பாதிக்காது.

தமிழகத்திற்குச் செல்லும் இலங்கைப் பிரஜைகளுக்கு போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இந்திய மத்திய அரசாங்கம், மாநில பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி தமிழகத்திற்கான பயணங்களை இலங்கைப் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.எனினும், தமிழகத்திற்கான பயணத் தடையாக இதனைக் கருத முடியாது என பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய வானொலிச் சேவையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply