செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் வாகனங்கள் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவில் ஆர்பாட்டத்தை முடித்துவிட்டு சென்றுக் கொண்டிருந்த தனது வாகனத்தின் மீதும் அதற்கு பின்னால் பயணித்த பஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தேராவில் பகுதியில் இரண்டு இராணுவ முகாம்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தனது வாகனத்தின் முன் கண்ணாடி கல் தாக்குதலுக்கு இலக்காகி உடைந்துள்ளதெனவும் மிகப்பெரிய இராணுவ முகாமுக்கு அருகில் வைத்தே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply