இஸ்லாத்தை அவமதிப்பு! வீடியோ உள்ளடக்கத்தை அமெரிக்கா நிராகரிப்பு
இஸ்லாத்தை அவமதிக்கும் வீடியோவின் உள்ளடகத்தையும் கருத்துக்களையும் அமெரிக்கா உறுதியாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
உலகெங்குமுள்ள பல முஸ்லிம்களையும் ஏனையோரையும் புண்படுத்தும் வகையில் அண்மையில் வெளியான வீடியோ குறித்து ஜனாதிபதி ஒபாமா மற்றும் வெளிவிவகார செயலாளர் கிளின்டன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்த விரும்புகிறது.
அந்த வீடியோவின் உள்ளடக்கத்தையும் தகவலையும் அமெரிக்கா உறுதியாக நிராகரிக்கிறது என்பதுடன் இந்த வீடியோவுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனையோரின் மத நம்பிக்கைகளை அவதூறுக்குள்ளாக்குவதற்கு வேண்டுமென்றே மேள்கொள்ளப்படும் எந்த முயற்சி குறித்தும் அமெரிக்கா விசனமடைகிறது.
அமெரிக்காவானது ஒரு பல்லின, பல் மத சமூகம் என்ற வகையில், எந்த தேசத்தினதும் எந்த மக்களதும் ஸ்திரத்தன்மைக்கு மத சகிப்புத்தன்மை அவசியம் என நம்புகிறது. அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். ராஜாங்க செயலாளர் கிளின்டன் கூறியுள்ளதைப் போல், மதத்தின் பெயரிலான வன்முறையை நாம் முழுமையாக நிராகரிப்பதுடன் வெறுக்கிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply