கடல் பாதுகாப்பு தொடர்பாக ஜப்பானின் உதவியை நாடும் இலங்கை
கடல் பாதுகாப்பு தொடர்பாக ஜப்பானிய உதவியையும் நிபுணத்துவ சேவையையும் இலங்கை கரையோரப் பாதுகாப்புப் படை கோரியுள்ளது. கரையோரப் பாதுகாப்புக்காக ஜப்பானிடமிருந்து சிறிய படகுகளை வாங்குவது பற்றியும் அது ஆலோசித்து வருகின்றது.
முன்னாள் கடற்படைத் தளபதியும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவருமான வசந்த கரன்னகொட, ஜப்பானிய கடல் தற்பாதுகாப்பு படையின் பிரதான படைய திகாரியான அட்மிரல் கட் சுடோஷி கவானோவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளினதும், இந்தப் பிராந்தியத்தினதும் கடல் தொடர்பான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடினார்.
கப்பல் பாதைகளின், குறிப்பாக இலங்கையின் தென்பகுதி கடலில் உள்ள கப்பல் பாதைகளின் முக்கி யத்துவம் குறித்தும் இதைக் கடல்கொள்ளையர்களிட மிருந்து பாதுகாப்பது குறித்தும் அவர்கள் முக்கியமாகப் பேசியுள்ளனர்.
அண்மையில் ஜப்பானியக் கடல் சுயபாதுகாப்புப் படையைச் சேர்ந்த 750 பேருடன் மூன்று ஜப்பானியக் கப்பல்கள் கொழும்புத்துறை முகத்துக்கு வந்திருந்தன.
இலங்கைக் கரையோரப் பாதுகாப்பு படைக்கு 1000 பேரைச் சேர்த்துக்கொள்ளவும் 30 அதிகாரிகளை நிய மிக்கவும் குறைந்தபட்சம் 8 படகுகளை வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply