சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
புகலிடக் கோரிக்கையாளர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இரண்டாயிரத்து 300க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபடும் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பி்டுகிறார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாக முற்பட்டபோது நீர்கொழும்பு எத்துகால் பகுதியில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply