இலங்கைப் பெற்றோர்களின் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை – நோர்வே
தமிழ் சிறார்கள் தொர்பிலான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியர் தாய்மொழியில் பேசுவதற்கு அனுமதிக்கப்பட வில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஒரே கட்டிலில் பிள்ளைகளுடன் பெற்றோர் உறங்குவதனாலும், கைகளினால் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவதனாலும் பிள்ளைகளை நோர்வே அரசாங்கம் பலவந்தமாக நலன்புரி நிலையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என இலங்கைக்கான நோர்வேத் தூதரக பேச்சாளர் மார்டா லியா டொர்க்ஸ்நேஸ் தெரிவித்துள்ளார்.
நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியரின் உறவினர்கள் கொழும்பில் அமைந்துள்ள நோர்வே தூதரகத்திற்கு அருகாமையில் அமைதியான போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
சிறுவர்களின் நலன், உரிமைகள் போன்றவற்றுக்கு நோர்வேயில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் சிறுமியரின் தேவைகள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத சந்தர்ப்பங்களில் நலன்புரி நிலையங்களின் ஊடாக சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் முனைப்பு காட்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் சிறுமியரின் இனம், நாடு, குடியுரிமை போன்ற காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது எனவும், சிறுவர் உரிமைகள் சகலருக்கும் சமமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவர் நலன் குறித்து நோர்வே சிறுவர் நலன்புரி அமைப்பிற்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
சிறுவர் நலன்புரி நிலையத்தின் தனித்துவமான கண்காணிப்பு நடவடிக்கைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே சிறுவர் சிறுமியர் நலன்புரி நிலையங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் நீதிமன்றமும், சிறுவர் நலன்புரி நிலையங்களும் சிறுவர் சிறுமியரின் கருத்துக்கு கூடுதல் முக்கியத்தும் அளிக்குமும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply