யாழில் பாகிஸ்தானின் வேவு தளம்? இந்தியாக் குழு இலங்கை வருகிறது
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் வேவு தளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுவது பற்றி விசாரணை நடத்த இந்திய குழு அந்நாட்டுக்கு செல்ல இருக்கிறது. இலங்கையின் பாகிஸ்தான் தூதரகம் இந்தியாவுக்கு எதிரான உளவு வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளே உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நேரடியாக தகவல்களை பரிமாறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தமீம் அன்சாரி என்பவர் கைது செய்யப்பட்டார். பிடிபட்ட தமீம் அன்சாரியும் இதே தகவல்களையே தமிழக பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர கடற்படை தளமான விசாகப்பட்டினத்தை வேவு பார்க்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் வேவு தளம் ஒன்றை பாகிஸ்தான் அமைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இதனால் கடும் அதிருப்தி அடைந்திருக்கும் இந்திய அரசு அண்மையில் இலங்கை அரசுடன் இது தொடர்பாக பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. மேலும் இந்திய உயர்நிலைக் குழு ஒன்ற் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் இது தொடர்பாக விரிவாக விவாதிப்பதுடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்துக்குரிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் இலங்கையை மையமாக வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply