முன்னாள் போராளிகள் 32 பேர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்

புனர்வாழ்வு பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் எதிர்வரும் ஒக்டோபர் 30ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 32 முன்னாள் போராளிகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளனர். தற்போது 779 முன்னாள் போராளிகள் மாத்திரமே புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் இருப்பதாகவும் அவர்களில் 32 பேரே விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 10,979 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக னர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் செய்யவென கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply