நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்து தீர்மானம் இல்லை

இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இன்னமும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கான உத்தேச விஜயம் குறித்து நவனீதம்பிள்ளை இன்னமும் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தொடர்பாடல் பிரிவு அதிகாரி ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நிலைமைகளை நேரில் கண்டறிய விஜயம் செய்யுமாறு அரசாங்கம் நவனீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

நவனீதம்பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு முன்னோடியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மூன்று விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்தப் பிரதிநிதிகளின் அறிக்கைக்கு அமைய இலங்கை விஜயம் குறித்து நவனீதம்பிள்ளை தீர்மானிப்பார் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply