நல்லிணக்க முனைப்புக்களில் இலங்கை கவனம்: ஜப்பான் நம்பிக்கை
நல்லிணக்க முனைப்புக்களில் இலங்கை கவனம் செலுத்தி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. நல்லிணக்கம், புனர்வாழ்வு, புனரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் இலங்கை கவனம் செலுத்தி வருவதகாக் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் கொய்ச்சியாரோ கெம்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமான சுற்றுலாத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல், கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட சகல முக்கிய விடயங்களிலும் இலங்கையுடன் நெருங்கிய உறவுகளைப் பேண ஜப்பான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply