விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிக்கக் கூடும்!

எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். தென் இந்தியாவில் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சித்து வருவதாகவும், மாவோ தீவிரவாதிகளுடன் தொடர்பு பேணி வருவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத செயற்பாடுகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் புலிகளின் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய சந்தர்ப்பங்களைக் கூட பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைய முயற்சிக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாத கோட்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளில் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தகர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அப்பாவிகள் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இலங்கையின் பாரிய பிரச்சினைகளுக்கு புலிகளே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply