திவிநெகும சட்ட மூலத்தின் தேவை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை

திவி நெகும சட்ட மூலம் அவரச சட்ட மூலமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எதிவரும் புதன் கிழமை இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனினும்  பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அரசாங்கத்துக்கு அவ்வாறான திட்டம் ஒன்று இல்லை என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், திவிநெகும சட்ட மூலத்தின் தேவை மற்றும் உட்கிடக்கைகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை அடுத்த வாரம் அரசாங்கம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி நிறுவப்பட்டுள்ள எட்டு மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடமாகாணம் இன்னும் நிறுவப்படாதுள்ள நிலையில், இந்த சட்ட மூலத்துக்கு வடக்கு மாகாண சபையின் சார்பில் மாகாண ஆளனரால் அத்தாட்சிப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது. உயர் நீதிமன்றம் இது தொடர்பிலான சட்ட விளக்கத்தை வழங்கும் வரையில் குறித்து மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply