பிலிப்பைன்ஸ் அரசாங்கம் – கிளர்ச்சியாளர்கள் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம்

பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் அந்த நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.  மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணி என்ற ஆயுததாரிகளுடன் நீண்டகாலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்னோ அக்கியூனோ தெரிவித்துள்ளார்.

40 வருடங்களாக இடம்பெற்ற மோதல்களில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரவிக்கின்றன.

கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாகவுள்ள பிலிப்பைன்ஸ்சில் இந்த உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தென்பிராந்தியத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் நாட்களின் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply