இலங்கையில் அதிகளவு வெப்பநிலை பதிவு
இலங்கையி
ல் கடந்தவாரம் முப்பதாண்டு இல்லாத வகையில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்தவாரம் வவுனியாவில் 40.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.இதேவேளை பொலன்னறுவ மாவட்டத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியது. அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இதுபோன்று கடும் வெப்பநிலை காணப்படும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியான ஜீவன் கருணாரத்ன கூறியுள்ளார்.
மலையகத்திலும் வெப்பநிலை சிறிதளவு அதிகரித்துள்ளது. கண்டியில் 32.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.
அதேவேளை, கொழும்பில் சராசரி வெப்பநிலையான, 31 பாகை செல்சியசே நிலவுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply