வெனிசுலாவின் ஜனாதிபதியாக மீண்டும் சாவேஸ் தெரிவு

வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக ஹியூகோ சாவேஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நீதிக் கட்சியின் வேட்பாளர் ஹென்ரிக் கேப்ரில்ஸ் ஐ விட10 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.  ஆறாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில், 1.9 கோடி மக்கள் நேற்று வாக்களித்தனர்.

வெனிசுலா நாட்டின் அதிபராக, சாவெஸ், 1998ம் ஆண்டு முதல், பதவி வகித்து வருகிறார். சோஷலிஸ்ட் கட்சி சார்பில், சாவெஸ் மீண்டும் இத்தேர்தலில் போட்டியிட்டார். 14 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள சாவெசை எதிர்த்து, நீதிக் கட்சியின் சார்பில், ஹென்ரிக் கேப்ரில்ஸ் போட்டியிட்டார்.

சாவேஸ் 70.4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் கேப்ரில்ஸ் 44.9 சதவிகித வாக்குகள் பெற்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply