தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் மாநில கட்சியாக மாறியுள்ளது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் மாநில கட்சியாக மாறியுள்ளதாகவும் அவர்களின் இந்திய விஜயத்தினால், இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏலமிட நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் தமிழ் மக்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தியாவின் சாஞ்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்த பின்னர், இந்திய பிரதமர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையின் அரசியல் கட்சியாக செயற்படவில்லை என்பதும் அது இந்தியாவின் மாநில கட்சியாக செயற்படுகிறது என்பதும் தெளிவாகியுள்ளது.
தமிழ் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து பேசுவதென்றால் அதனை ஜனாதிபதியுடனேயே பேச வேண்டுமே அன்றி, இந்தியாவுடன் அல்ல. இந்தியாவை கொண்டு இலங்கை மீது அழுத்தங்களை கொடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த ஏலம் காரணமாக வட பகுதிக்கு எதுவும் கிடைக்கவில்லை எனவும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply