இலங்கையின் உயர் மட்ட குழு இந்தியா செல்கிறது
கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கையின் உயர் மட்ட குழுவொன்று எதிர்வரும் 12 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்ளி சம்பிக்க ரணவக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். குறித்த அணு மின் உற்பத்தி நிலையத்தினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக உள்ளது.
இந்த நிலையில், அது தொடர்பில் முழுமையாக ஆராயும் நோக்கிலும் மத்திய அரசாங்கத்துடன் இது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தவும் இலங்கயின் உயர் மட்ட குழு இந்தியா செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply