யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கூச்சல் குழப்பங்கள்! முடிவுகள் எதுவுமில்லை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கூச்சல் குழப்பங்கள் மத்தியில் நடந்து முடிந்துள்ளது. ஆளும் தரப்பின் பங்காளியான ஈபிடிபி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திரகுமார் மற்றும் அலென்ஸ்சன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர். கூட்டமைப்பின் சார்பில் அதன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியமாக இன்று ஒன்று திரண்டு கலந்து கொண்டிருந்தனர். மாவை சேனாதிராசா சுரேஸ் பிறேமச்சந்திரன், விநாயகமூர்த்தி, சிறீதரன், சுமந்திரன் மற்றும் சரவணபவன் என அனைவரும் திரண்டிருந்தனர். யாழ்குடாநாட்டில் படை முகாம்களுககென காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்ற விடயம் சூடுபிடித்திருந்த நிலையில் அரசின் கொள்கை அதுவென கூறி கூட்டத்திற்கான இணை தலைமையினை தாங்கியிருந்த டக்ளஸ் மற்றும் ஆளுநர் சந்திரசிறி ஆகிய இருவரும் சமாளிக்க முற்பட்டனர்.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கூட்டமைப்;பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவீகரிக்கப்பட்ட காணி விபரங்களை கோர முற்பட்டனர். வுhதப் பிரதிவாதங்கள் முற்றி நீ நான் என்ற சொற்பதங்கள் பரவலாகப்பறந்தன. ஒரு கட்டத்தில் மண்டையன் குழு தலைவரென டக்ளஸ் சுரேஸினை கிண்டல் பண்ண பதிலுக்கு பாகுபாடுகள் மறந்து கூட்டமைப்பினர் எல்லோரும் சீறி எழுந்தனர். பதிலடியாக கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் திரண்டு எழ அமைச்சர் தரப்பு திண்டாடிப்போனது. அடிக்கொரு தரம் தான் அரசினது அமைச்சரென டக்ளஸ் கூற கிண்டல்களால் சபை அதிர்ந்தது. விருப்பமில்லாவிட்டால் கூட்டமைப்பினர் வெளியேறலாமென ஒருபுறம் டக்ளஸ் கூற கச்சேரி ஒன்றும் ஈபிடிபி சொத்தல்லவென சீறினார் சுமந்திரன்.

குறிப்பாக சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையேயான மோதல் அடிக்கடி நடந்து கொண்டிருந்தது. பலவேளைகளில் ஒன்றுமே செய்ய முடியாது ஆளுநர் சந்திரசிறி வாய்மூடி வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார். சுமார் ஒரு வருட  இடைவெளியின் பின்னர் நடந்த இக்கூட்டத்தில் பெரும்பாலான விடயங்கள் கூச்சல் குழப்பங்கள் மத்தியில் ஆராயப்படாமலே  கைவிடப்பட்டுவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply