இலங்கை குதிரைப் படைக்கு வெளிநாட்டு குதிரைகள் கொள்வனவு

பொலிஸ் திணைக்களத்தின் குதிரைப்படைப் பிரிவுக்கு புதிதாக 18 குதிரைகளைக் கொள்வனவு செய்ய அத்திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
புதிதாக கொள்வனவு செய்யப்படவுள்ள விசேட ரகத்தைச் சேர்ந்த மேற்படி குதிரைகளுக்காக தலா 2.7 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

பொலிஸ் குதிரைப்படைப் பிரிவானது நாட்டின் மிகவும் மரியாதைமிக்க விழாப் படையணியாகத் திகழ்கின்றது. இந்நிலையில், தற்போது மேற்படி பிரிவில் 40 குதிரைகள் காணப்படுகின்ற போதிலும் அவை தீவிரமாக கடமையாற்றும் வயதைக் கடந்துள்ளன.

பொலிஸ் குதிரைப்படை அதிகளவான மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காகவும், தேசிய சம்பிரதாயபூர்வ நிகழ்ச்சிகளின் போதும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply