பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் பலி
பாகிஸ்தானில் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தாரா ஆடம் கேல் என்ற கிராமத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பு தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
2009 ம் ஆண்டு ராணுவ நடவடிக்கைக்கு முன்இதடை செய்யப்பட்ட பாகிஸ்தான் தலிபான் அமைப்பு தாரா ஆடம் கேல் பகுதியை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply