பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான சிறுமியின் உடல்நிலையில் முன்னேற்றம்

பாகிஸ்தானில் மலாலா யூசூப்ஸாய் என்ற பள்ளி மாணவி தீவிரவாதிகளுக்கு எதிராகவும், பெண்கள் கல்வியை வலியுறுத்தியும் பொதுக்கூட்டங்களில் பேசி வந்தாள். இவளது சேவையை பாராட்டி அந்நாட்டின் அமைதிக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த 10-ம் வகுப்பு மாணவியின் துணிச்சலைக்கண்டு கொதிப்படைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த செவ்வாய் அன்று பள்ளிப் பேருந்திலேயே வைத்து அவளது தலையில் சுட்டனர். உயிருக்குப் போராடிய அவள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு அவளது தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், டாக்டர்கள் 48 மணி நேர கெடு விதித்தனர். அவள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப நாடே அவளுக்காக பிரார்த்தனை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு சிறப்பு மருத்துவர்கள் உட்பட ராணுவத்தில் பணியாற்றும் மூத்த மருத்துவர்களும் தொடர்ந்து அவளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மலாலாவின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவளின் முக்கிய உறுப்புகள் பாதிப்பின்றி, நல்லமுறையில் செயல்படுகின்றன. தேவைப்பட்டால் வெளிநாட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் அவள் மீண்டு வந்தால், அவளையும் அவளது தகப்பனாரையும் சுட்டுக்கொல்வோம் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply