2013 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம்: இதுவரை தீர்மானம் எதுவுமில்லை
2013 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பது குறித்து தமது கட்சி இதுவரை தீர்மானிக்கவில்லையென ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இந்த தகவலை ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் வெளியிட்டுள்ளார்.
எனினும்இ வரவு செலவு திட்ட வாக்களிப்பில் இருந்து விலக தாம் தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்திருந்தார்.
ஆசனிக் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காரணமாகவே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ரத்தன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply