சிறுவர்களை பாதுகாப்பதற்கு ஐந்து திட்டங்கள் அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானம்

நாட்டிலுள்ள சிறார்களுக்காக 5 முறைகளிலான சிறுவர் பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது. நாளாந்தம் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அன்பு மற்றும் அஹிம்சை வழிகளில் சிறார் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு தாம் நீண்டகால நோக்கில் திட்டங்களை வகுத்து வருவதாக அதிகாரசபையின் தலைவர் அனோமா திசாயநாயக்க தெரிவித்தார்.

இதனிடையே, சிறார்கள் மத்தியில் தொற்றாத நோய்கள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறார்களிடையே நோயெதிர்ப்பு சக்தி குறைவடைந்து வருகின்றமையே இதற்கான காரணம் என்றும் சிறார் மருத்துவ நிபுணர் தீபாலி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply