கிளிநொச்சி காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு வழங்கும் திட்டமொன்றை காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு ஆரம்பித்துள்ளது. கிளிநொச்சி கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் காணி தொடர்பான சுமார் 4000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதென அமைச்சின் செயலாளர் அசோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்களின் ஆவணங்கள் அழிவடைந்துள்ளமை மற்றும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் காணிகளை வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டமை போன்ற முறைப்பாடுகள் பொதுமக்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மூன்று மாதக் காலப்பகுதிக்குள் இந்த பிரச்சினைக்கான தீ்ர்வை எட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் மக்கள் இடம்பெயர்ந்த போது காணிகளுக்காக ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை மற்றும் மக்கள் இடம்பெயர்ந்ததன் பின்னர் அவர்களது காணிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வேறு நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை போன்ற சம்பவங்க்ள இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply