சட்டவிரோத புகலிடக் கோரிக்கையை தவிர்க்கவும் – அவுஸ்திரேலியா பகிரங்க அறிவிப்பு

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத முறையில் புகலிடம் கோரி வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் சட்ட விரோத பயணிகளின் ௭ண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவித்தலை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ளது.

இலங்கையிலிருந்து இந்த ஆண்டு சட்ட விரோதமான முறையில் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா செல்ல முயன்றார்கள் ௭ன்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை பொலிஸாரினாலும் கடற்படையினராலும் இதுவரை சுமார் 2850 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த மாதத்தில் மட்டும் பெண்கள் குழந்தைகள் உட்பட 1024 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த மாதத்திலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு நேரடியாக கடல் மார்க்கமாக புகலிடம் கோரி செல்பவர்களைத் தவிர இந்தியாவிலிருந்தும் புகலிடம் கோரி இலங்கையர்கள் செல்வதும் அண்மைக்காலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து கடல் வழியாக புகலிடம் கோரி செல்பவர்களில் ஒரு பகுதியினர் கைது செய்யப்பட்டாலும் பலர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து சட்ட விரோதமான முறையில் புகலிடக்காரர்கள் வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலில் அவு ஸ்திரேலியாவிற்கு விசா இல்லாமல் பய ணம் செய்தால் விண்ணப்பம் அவுஸ்திரேலியாவில் பரிசீலிக்கப்படாது போகலாம். அது மட்டுமல்ல நாவுறு பப்புவா நியூகினி போன்ற வேறு ஒரு நாட்டிற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். இலங்கையிலுள்ள குடும்பத்தினருக்கு அனுப்ப நாவுறுவிலோ அல்லது பப்புவாநியூகினிலோ பணம் சம்பாதிக்க முடியாது.

விசேட மனிதாபிமான திட்டத்தில் குடும்பத்தை இணைத்துக் கொள்ள விண்ணப்பிக்க முடியாது ௭ன அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply