மாணவி மலாலா யூசுப்சாய் பற்றி பிரசாரம்: செய்தி நிறுவனங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டம்
பாகிஸ்தானில் பெண் கல்விக்கு எதிராக செயல்படும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக 14 வயது பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் பிரசாரம் செய்து வருகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தலை மற்றும் உடலில் குண்டு பாய்ந்த மலாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலிபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து செய்திகளை பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்கள் விரிவாகவும், உருக்கமாகவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளி மாணவிகளிடையே புதிய வேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
தலிபான் தீவிரவாதிகள் மீதான அச்சம் நீங்கி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மலாலா விரைவில் குணமடைய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இது தலிபான்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி மலாலாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களை தாக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான சிறப்பு உத்தரவை தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மசூத் பிறப்பித்துள்ளார். இந்த தகவலை பிபிசி உருது செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது,
தலிபான் தீவிரவாதிகளின் தலைவர் மசூத், அவரது உதவியாளர் நதீம் அப்பாஸ் என்கிற இன்டிகுவாவுடன் பேசிய டெலிபோன் உரையாடலை உளவுத்துறை ஒட்டு கேட்டது. அப்போது கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் சில நகரங்களில் உள்ள செய்தி நிறுவனங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தும்படி அறிவுறுத்தியது தெரியவந்தது என்றார்.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உள்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனங்கள் மற்றும் டெலிவிஷன் நிறுவன உரிமையாளர்களுடன் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், உயர் போலீஸ் அதிகாரிகளும், 4 மாகாணங்களின் தலைமை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply