நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீது தாக்குதல்
நல்லூர் பிரதேச சபையின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ப. வசந்தகுமார் மீது கொக்குவில் அம்பட்டன் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே வசந்தகுமார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான வசந்தகுமார் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி முன்னதாக ப.வசந்தகுமார் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் காணி தொடர்பான ஆவணங்களின் பிரதியை கோப்பாய் பொலிஸாரிடம் இன்று ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பும் போதே ப. வசந்தகுமார் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply