அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்! ஒபாமா இன்று வாக்களிக்கிறார்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமா இன்று தனது வாக்கைப் பதிவு செய்யவுள்ளார். அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஒருவர் வாக்களிப்பது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க தேர்தல் சட்டத்தின்படி ஒவ்வொரு மாநில வாக்காளர்களும் தேர்தலுக்கு முன்னதாகவே ஒரு குறிப்பிட்ட தினத்தில் வாக்களிக்க முடியும்.

இந்நிலையில், ஒபாமா சிகாகோவில் இன்று  வெள்ளிக்கிழமை வாக்களிக்கவுள்ளார்.

இது தொடர்பில் தகவல் தெரிவித்த ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் ஜென் கூறுகையில், ‘ஜனாதிபதியான இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்னதாக வாக்களிப்பதன் மூலம் ஒபாமா சரித்திரம் படைக்கவுள்ளார்’ என்றார்.

கொலராடோ மாகாணத்தில், தனது தேர்தல் பிரச்சாரத்தின் இடையே இது தொடர்பில் பேசிய ஒபாமா, ‘நீங்கள் கொலராடோவில் முன்னதாக வாக்களிப்பதைப் போல, நாங்கள் இல்லினாய்சில் வாக்களிக்க முடியும். நான் மீண்டும் கொலராடோவுக்கு வருவேன். நான் இப்போது உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். அமெரிக்காவை முன்னோக்கி கொண்டு செல்ல எனக்கு உதவுங்கள் என்று கேட்க வந்துள்ளேன்’ என்றார்.

இந்நிலையில், டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை பதிவான தேர்தலுக்கு முந்தைய வாக்குகளில் ஒபாமா மூன்றில் இருபங்கு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இதனால் ஒபாமா இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஒபாமா பேசுகையில், ‘நாம் இந்த தேர்தலில் வெற்றிகொள்ளப் போகிறோம். நாம் ஆரம்பித்தவற்றை முடிக்கப் போகிறோம். அமெரிக்கா ஏன் உலகிலேயே முதன்மையான நாடாக இருக்கிறது என்பதை நாம் உலகிற்கு உணர்த்துவோம்.

ஈராக், ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என கடந்த முறை நான் கூறினேன். அதைப்போல் ஈராக், ஆப்கானில் போரை முடித்தோம். இரட்டைக்கோபுர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது மீண்டும் கவனம் செலுத்துவோம் எனக் கூறினேன்.

இப்போது நியூயோர்க் ஸ்கைலைனுக்குமேல் புதிய கோபுரம் உயர்ந்து வருகிறது. அல்-கொய்தா தோற்கடிக்கப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்டான். நமது வீரர்கள் நாடு திரும்புகின்றனர். நான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply