இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு
இந்தியா சென்றுள்ள இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் அழைப்பினை ஏற்று, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார்.
இந்தியா சென்ற அவர் முதலில் இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply