விரிவுரையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  குறித்த இணக்கப்பாடுகளை செயற்படுத்த அரசு தயங்கி வருவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இணக்கப்பாடுகள் குறித்து கூடிய கவனம் செலுத்தியதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி மஹிம் மென்டிஸ் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கடந்த 24ம் திகதி மற்றும் இன்றைய தினம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்துடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடவேண்டி ஏற்பட்டதென உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 30ம் திகதி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply