கூடங்குளம் அணு உலையை உடனடியாக நிறுத்துமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம்
இந்தியாவின், கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையை உடனடியாக நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்ட இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகர்ப் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த அணு உலையில் வெடிப்புக்களோ, கசிவோ ஏற்படும் பட்சத்தில் அதன் கதிர் வீச்சினால் இலங்கைக்கும் பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதனால் அதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியே இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்தியாவின் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வடமாகாணம் முழுமையாகவும், புத்தளம், திருகோணமலை போன்ற மாவட்டங்களுடன் வேறு சில மாவட்டங்களும் பாதிப்படையும்.
அத்துடன், திடீர் மரணங்கள் உட்பட புற்றுநோய் மற்றும் உயிர்க்கொல்லி நோய்களையும் உருவாக்குவதுடன் எதிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகளும் அங்கவீனர்களாக பிறக்கும் சாத்தியங்கள் அதிகமாக உருவாகும் குறித்த துண்டுப் பிரசுரங்களின் மூலம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
எனவே, கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இந்திய மக்கள் போராடி வரும் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையர் ஆகிய நாமும் போராட வேண்டும். எமது சூழலை பாதுகாத்துக் கொள்ளவும், மீன்பிடித் தொழிலை பாதுகாத்துக் கொள்ளவும், உயிர்களை பாதுகாத்துக் கொள்ளவும், ஒன்று சேருவோம்.
எதிர்காலத்தில் ஏற்படும் அழிவை நிறுத்துமாறு இந்திய, இலங்கை அரசாங்கத்தினை வற்புறுத்துவோம். ஒன்றிணைந்து போராடுவோம் அதில் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply