இலங்கைக்கு எதிராக 99 நாடுகள் கேள்விப் பத்திரம் தயாரிக்கின்றன
அகில கால மீளாய்வு அமர்வுகளில் சுமார் 99 நாடுகள் இலங்கை தொடர்பில் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில நாடுகள் முன்கூட்டியே இலங்கை தொடர்பான கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. மனித உரிமை மீறல்கள், வட மாகாணசபைத் தேர்தல், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகள் அமுலாக்கம் போன்ற விடயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காஇ பிரித்தானியா, செக்குடியரசு, கனடா, ஸ்பெய்ன், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே கேள்விகளை சமர்ப்பித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்த விவாதத்தின் போது ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வடக்கில் ஏன் தேர்தல் நடத்தத் தாமதிக்கப்படுகின்றது என அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது. சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டங்களை அமுல்பத்துவதில் கால தாமதம் நிலவி வருவதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
செனல்4 வீடியோ, மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலை, திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை, பொத்துவில் பிரதேசத்தில் பத்து தன்னார்வ தொண்டர்கள் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன விவகாரம், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை ஆகியன தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இதேவேளை, மெனிக்பாம் முகாம் மூடப்பட்ட போதிலும் இடம்பெயர் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனரா என்பதில் சந்தேகம் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றின் விசாரணைகள் எந்தளவிற்கு பூர்த்தியாகியுள்ளன என்பது பற்றி பிரித்தானியா கேள்வி எழுப்பியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply