பயோ வீசா முறையை இலங்கையிலும் அமுல்படுத்த தீர்மானம்

எதிர்வரும் காலங்களில் மலேசியாவிற்கு செல்லும் இலங்கையர்கள் தமது நுழைவு அனுமதியினை பெறுவதற்கு ‘பயோ வீசா’ முறைமைக்கு அமைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மலேசியா தெரிவித்துள்ளது. மலேசியாவிற்கான நுழைவு அனுமதியைப் பெறுவதில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதை கவனத்தில் கொண்டே இந்த முறைமை இலங்கையிலும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மலேசிய குடிவரவுத் துறை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முறைமைக்கு அமைய நுழைவு அனுமதி விண்ணப்பதாரிகளின் பெருவிரல் அடையாளம் பெறப்பட்டு மலேசிய விமான நிலையங்களில் அவை ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த புதிய தொழில்னுட்ப முறைக்கமைய நுழைவு அனுமதி மோசடியினை முற்றாக தவிர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயோ வீசா முறைமை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி அமுலுக்கு வரவுள்ளது.

இலங்கை, சீனா, இந்தியா, பங்களாதேஷ், பாக்கிஸ்தான், நைஜீரியா, மியன்மார் உட்பட 38 நாடுகள் பயோ வீசா முறைமையை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply