ஓமான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
ஓமானின் வெளிவிவகார அமைச்சர் பின் அலவ் பின் அப்துல்லா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் ஓமான் வெளிவிவகார அமைச்சர் நேற்று (30) இரவு இலங்கை வந்துள்ளார். இன்றைய தினம் ஓமான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ளவென உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஓமான் வெளிவிவகார அமைச்சர் தனது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply