சன் சீ கப்பலில் சென்ற 20 பேருக்கு புகலிடம் கிடைத்தது
சன் சீ கப்பல் மூலம் கனடாவில் புகலிடம் கோரியோரிய 492 பேரில் இதுவரையில் 20 பேருக்கு மட்டுமே புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. 35 புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் இதுவரையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் இந்தப் புள்ளிவிபரத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் திகதி குறித்த கப்பல் பயணிகள் 492 பேரும் புகலிடம் கோரியிருந்தனர். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கப்பலில் பயணித்த 23 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். ஆட்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேருக்கு எதிராக கனேடிய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply