நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 49,788 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 13074 குடும்பங்களைச் சேர்ந்த 49788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் முலட்டியான மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதென அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5583 குடும்பங்களைச் சேர்ந்த 19785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் 9 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 1101 குடும்பங்களைச் சேர்ந்த 4626 பேர் பாதிக்கப்பட்டதோடு 39 வீடுகள் முற்றாகவும் 89 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்த 215 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 853 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 10 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டம் வத்தளையில் 3453 குடும்பங்களைச் சேர்ந்த 15152 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 256 குடும்பங்களைச் சேர்ந்த 1234 பேர் 5 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரில் 469 குடும்பங்களைச் சேர்ந்த 1836 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணத்தில் 2164 குடும்பங்களைச் சேர்ந்த 7107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்று காரணமாக 18 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 350 வீடுகள் பகுதி அளிவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 298 குடும்பங்களைச் சேர்ந்த 1186 பேர் 2 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply