அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்பட்டுகிறது – கெஹெலிய
நீதித்துறையில் அரசாங்கம் தலையிடுவதில்லை எனினும் நீதிதுறைக்கும் ஏனையவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் எழும்போது அதனை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கு அரசியலமைப்பில் ஏற்பாடுகள் இருக்கின்றன. பிரதம நீதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையை பொறுத்தளவில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்பட்டுள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல தெரிவித்தார்.
ஜெனிவாவில் அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையின்போது அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
‘பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை பொறுத்தளவில் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே இலங்கை அரசாங்கம் நடந்துள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுள்ளனர்.
ஈவிரக்கமற்ற காட்டுத் தர்பார் முறையில் இது நடந்திருந்தால் இந்த விமர்சனத்தை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இது அப்படியல்ல’ என்றார்.
‘குறிப்பாக பிரதம நீதிபதியை குற்றப்பிரேரணை மூலம் பதவி விலக்க எடுக்கும் முயற்சிகள் பற்றிய செய்திகளின் பின்னணியில் நீதித்துறை செயன்முறையின் அரசாங்கத்தின் தலையீட்டை நிறுத்துவதனால் நீதித்துறையின் சுதந்திரம் வலுவூட்டப்பட வேண்டுமென அமெரிக்கா பரிந்துரைக்கின்றது’ என அமெரிக்க தூதுவர் எய்லின் சம்பர்லெயின் டொனவோ கூறியிருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply