ஹெஜிங் தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு – சுசில் பிரேம ஜயந்த
டொச் வங்கிக்கு எதிரான ஹெஜிங் வழக்கு குறித்து அமெரிக்க மத்தியஸ்த நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். மேன்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை சட்ட மாஅதிபர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டொச் வங்கியுடனான ஹெஜிங் உடன்படிக்கை மீறப்பட்டமை குறித்து அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க மத்தியஸ்த நீதிமன்றம் விசாரித்தது.
அந்த மத்தியஸ்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் ஒருவர் இலங்கைக்கு சார்பாகவும் மற்றைய இரண்டு நீதிபதிகளும் எதிராகவும் கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.
இதற்கமைய வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை ஆட்சேபித்து மேற்முறையீடு செய்வதற்குரிய வழிவகைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டொச் வங்கிக்கு எதிராக ஹெஜிங் வழக்கில் அந்த வங்கிக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சி.பி.சி) 60 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டுமென அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்தியஸ்த நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
உரிய நேரத்தில் கடனை செலுத்தாமல் விட்டமைக்கான வட்டியுடன் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அக்கடனை செலுத்தவேண்டியிருக்குமென அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை இது எங்களுக்கு எதிரான தீர்ப்பாகும் நாம், இந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்கத் தேவையான நடவடிக்கைகள் பற்றி யோசித்து வருகிறோம் என சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.
2007 இல் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்துகொண்டிருந்தபோது வங்கிகளிடம் இழப்பீடு பெறும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஹெஜிங் உடன்படிக்கையை செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply