பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் நவநீதம்பிள்ளை கூடுதல் கவனம்
இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவ் விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் விரைவில் விளக்கம் கோரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் பிரதம நீதியரசருக்கெதிராக பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை தொடர்பில் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்கா உட்பட்ட நாடுகள் விமர்சனங்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply