தமிழ்நாட்டில் 15 இலங்கை அகதிகள் மாயம்!

தமிழ்நாடு – திருநெல்வெலி மாவட்டம் போகநல்லூர் பிரதேச முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 15 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த முகாமில் 139 பேர் தங்கியிருந்ததாகவும் அதில் 15 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காணாமல் போயுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அகதிகள் காணாமல் போன விவகாரம் தொடாபில் சொக்கம்பட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், குறித்த அகதிகள் கூலி வேலை செய்வதற்காக முகாமை விட்டு வெளியேறிதாகவும்,ஓரிரு தினங்களில் திரும்பி விடுவார்கள் எனவும் அகதி முகாமையில் தங்கியிருப்போர் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply