தனிப்பட்ட நபர்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஐதேகவுக்கு இல்லை

நீதிமன்றின் சுயாதீனத்தை பாதுகாப்பது அனைவரினதும் பாரிய பொறுப்பு என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று (19) வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் ஆரம்பமான நிலையில் எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றின் சுயாதீனத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தனிப்பட்ட நபர்களை பாதுகாக்க வேண்டிய தேவை கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்தி வருவதாகவும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply