ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அமெரிக்க உயர் அதிகாரிக்கு விளக்கம்

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் நீதித்துறையின் பங்களிப்புப் பற்றி நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய அலுவல்கள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் கலாநிதி அலைஸ்ஸா அய்ரஸ் தலைமையிலான குழுவினரிடம் விளக்கமளித்தார்.

நீதியமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் காணப்படும் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

இதன் போது கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் விதந்துரைகளை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், முன்னர் யுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது குறித்தும், மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் விளக்கிக் கூறினார்.

இலங்கையின் செயல்திறன் மிக்க நீதித்துறை, நம்பகமான நீதித்துறை வழிமுறைகள்
ஊடக சுதந்திரம் ஆகியவைப் பற்றி விளக்கியதுடன், அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அதன் சில முக்கிய அம்சங்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply