இலங்கைக்கு அதிகப்படியான ஆதரவு – கக்கஸ்தான் ஜனாதிபதி உறுதி

இலங்கையில் அபிவிருத்திகளை நோக்காக் கொண்டு, அதிக பட்சமான ஆதரவினை வழங்குவதற்கு கக்கஸ்தான் ஜனாதிபதி நுர்சுல்த்தான் நசபஏய்வ் உறுதி அளித்துள்ளார்.  கசகஸ்தானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக தோன்றியுள்ள சர்வதேச அழுத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டிற்கு தேவையான தீர்வுகளை, நாட்டின் உள்ளேயே பெற்று கொள்ள வேண்டியது அவசியம் என்று கசக்கஸ்தான் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச மட்டத்தில் ஏற்படும் பிழையான நிலைப்பாடுகளுக்கு எதிராக கசகஸ்தான் தொடர்ந்தும் இலங்கைக்கு சார்பான ஆதரவினை வழங்கும் என்றும் எனவும் ஜனாதிபதி நுர்சுல்த்தான் நசபஏய்வ் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, கசகஸ்தான் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பொன்றையும் விடுத்துள்ளார்.

இதேவேளை, விமானசேவை அபிவிருத்தி, சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் மேம்பாட்டை காண்பதற்கான பேச்சுவார்த்தைகளும், இரு தரப்பினருக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply