பாணால் பிரதேச சபையில் ஏற்பட்ட பெரும் சர்ச்சை

2013 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் உள்ளுராட்சி மன்ற கூட்டங்களிலும் இந்த திட்டம் மீதான வாதப்பிரதிவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் எல்பிட்டிய பிரதேச சபையின் நேற்றைய கூட்டத்திற்கு  ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் பாணுடன் வந்தமையினால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பினர் கூச்சல் குழப்பம் செய்தனர். 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு 25 ரூபா மாத்திரமே சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த சம்பள அதிகரிப்பில் பாண் கூட சாப்பிட முடியாது என்று கூறி பாணை தூக்கிப்பிடித்து கிண்டல் செய்தனர் இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply