கோப் இறுதி அறிக்கை ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்!

பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) 2012 ஆம் ஆண்டுக்கான இறுதி அறிக்கை 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். என்று அக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். அந்த அறிக்கையில் அரச நிறுவனங்கள் 235 தொடர்பிலான கணக்காய்வு அறிக்கைகள் அடங்கிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் (கோப்) 2012 ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை கடந்த ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply