யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் இன்னும் வழங்கவில்லை

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை அரசாங்கம் இன்னும் வழங்கவில்லை என்று, கனடா குற்றம் சுமத்தியுள்ளது. ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் கிறிஸ்டினா ரோய் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு போதுமான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவில்லை என்றே கனடா கருதுகிறது.

இந்த நிலையில் கொழும்பில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டெபன் ஹார்பர் கலந்துக் கொள்ள மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply