கைது செய்யப்பட்ட மாணவர்கள் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைப்பு

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்று அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த மாணவர்கள் 24 மணியத்தியாலங்கள் சென்ற பின்னரும், இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்ற ஒன்றாக மாறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் போது, கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் தற்போது வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளுர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.

அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply