மாணவர்களை விடுவிப்பது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் சம்பந்தன் பேச்சு

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் வவுனியாவில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரனா இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பாக தான், பொலிஸ் மா அதிபருடன் தொடர்புகொண்டதாக தெரிவித்த சம்பந்தன் அவர்கள், அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்ட காரணத்தினாலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் மா அதிபர் தம்மிடம் கூறியதாக குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், இராணுவம் பல்கலைக் கழகத்துக்குள் போனது தவறு என்றும், அவர்கள் பல்கலைக்களக வளாகத்துக்குள் சென்றிருக்காவிட்டால், இந்த நிலைமை உருவாகியிருக்காது என்றும் ஆகவே இந்த விவகாரத்தை இன்னமும் பெரிதுபடுத்தாமல், மாணவர்களை விடுவிப்பது பொருத்தமாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் பொலிஸ் மா அதிபரிடம் தான் கூறியதாக சம்பந்தன் கூறினார்.

அதேவேளை, இந்த மாணவர்களின் கைது விவகாரங்களை கையாள ஒரு சட்டத்தரணியை தாம் நியமித்திருப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply